புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று பதினோராம் நாள் காத்திருப்பு போராட்டம் மட்டும் இன்று அரை நிர்வாண போராட்டம் நடைபெற்று வருகிறது தமிழக அரசே! தி.மு.க அரசே!!

- தேர்தல் வாக்குறுதியின்படி அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமுலாக்கு!
- 25 மாதங்களாக நிலுவையில் உள்ள
ஓய்வுகால பலன்களை உடனே வழங்கு! •ஓய்வுபெறும் நாளன்றே
ஓய்வுகால பணப்பலன் வழங்குவதை உறுதிப்படுத்து! •ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணியில் உள்ள ஊழியர்கள் பெறும் அகவிலைப்படியை வழங்கு! • ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதியத்தை உயர்த்து! • குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7-வது ஊதியக்குழு அடிப்படையில் உயர்த்தி வழங்கு! - ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கு! • போக்குவரத்து கழகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கு! • ஒப்புக்கொண்டபடி 15-வது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனே வழங்கு!
- அனைத்து பணிமனைகளிலும் பெண் ஊழியர்களுக்கு தனியே ஓய்வறை, கழிப்பறை அமைத்துக்கொடு!
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்! காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற ஆதரவு தாரீர்! நிதி தாரீர்! இவண். புதுக்கோட்டை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் – CIT அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற நலஅமைப்பு – CITU – REWA புதுக்கோட்டை மண்டலம்