ஆதினத்தை தோட்டால் திமுகவில் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள் என பாஜக பிரமுகர் ஹெச் ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எட்டு ஆண்டுகளை கடந்து விட்டதை அடுத்து சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாடெங்கிலும் நடந்து வருகிறது. அந்த வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றில் ஹெச் ராஜா பேசினார். அதில் தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையில் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும் 2ஜி அலைக்கற்றையை விட இந்த ஊழல் மிகவும் பெரியது என்றும் அவர் கூறினார். மதுரை ஆதினம் ஒரு நாட்டுப்பற்றுள்ள மனிதர் என்றும், அவரை மிரட்டுகிறார்கள் என்றும் அவரை தொட்டால் திமுகவில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் என்றும் எல்லோரும் பாஜகவிற்கு வந்து விடுவார்கள் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.