• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

ஜி.வி.பிரகாஷ், வசந்தபாலன் கூட்டணியில் ‘ஜெயில்’

Byமதி

Oct 28, 2021

‘வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, காவியத்தலைவன்’ என வெகு சிலப் படங்கள் மூலம் தமிழில் முக்கியமான இயக்குநராகப் பார்க்கப்படுபவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில்‘ஜெயில்’ படம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ்க்கு ரெடியாகி உள்ளது. ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக்கிறோம் என்றுக்கூறி கூவம் ஆற்றங்கரையோம் வசித்த மக்களை துரைப்பாக்கம் அருகேயுள்ள கண்ணகி நகருக்கு அப்புறப்படுத்திய அரசை கேள்வி கேட்கிறது ‘ஜெயில்’ டீசர். அதோடு, அப்பகுதி மக்கள் மீது தொடர்ச்சியாக கேஸ்களை குவிக்கும் காவல்துறையினர், ‘கண்ணகி நகர்’ பகுதி மக்கள் என்பதற்காக வேலை கொடுக்காத அவலம் என ஒரே டீசரில் அத்தனையையும் கண்முன் நிறுத்தி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

இந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டிருக்கிறார். இந்த டீஸர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.