• Mon. Apr 21st, 2025

குட்கா பொருட்கள் மிக எளிதாக தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்!..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மெகா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, கர்நாடாகாவில் குட்கா பொருட்களுக்கு தடை இல்லை என்ற காரணத்தால், அங்கிருந்து தமிழகத்திற்கு மிக எளிதாக குட்கா பொருட்கள் அதிகம் கடத்தி வரப்படுகிறது. மேலும், குட்கா பொருட்கள் அதிகம் காய்கறி வண்டிகளில் கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்ததையடுத்து, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை,மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் அதனை ஒழிக்க தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஏராளமானோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்தாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை 62% விகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக கூறிய அமைச்சர்,தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.