• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெளிநாடுகளில் பரவும் துப்பாக்கி கலாச்சாரம்

பள்ளி, கல்லூரி, மாணவர்கள் துப்பாக்கி சூடு நடத்துவது சமீப காலமாக வெளிநாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அப்படி ரஷ்யாவின் பெர்ம நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கியை கொண்டு திடீர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கி சுட்டில் 5 அப்பாவி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு நடைபெறும் போது தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள மாணவர்கள் மாடியில் இருந்து குதிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.