• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம்- தமிழகத்தில் முதல் முறையாக…!!

ByA.Tamilselvan

Jun 30, 2022

தமிழகத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது.
ஜிஎஸ்டி கூட்டம் பொதுவாக வடஇந்திய மாநிலங்களிலேயே நடைபெறுவது வழக்கம்.ஸ்ரீநகர்,சண்டிகர்,டெல்லி ,மும்பை என 47க்கும் மேற்பட்ட முறை ஜிடிஎஸ் கூட்டம் நடைபெற்றள்ளது.இதில் ஒருமுறை கூட தமிழகத்தில் நடைபெற்றதில்லை.
இந்நிலையில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த ஜிஎஸ்டி கூட்டம் முதல் முறையாகத் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அழைப்பை ஏற்று இக்கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுகவின் ஆட்சியின் போது கூட ஜிஎஸ்டி கூட்டம் தமிழகத்தில் நடைபெற்றதில்லை . மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்தது.