• Mon. Jan 20th, 2025

GST துணை ஆணையர் மற்றும் 2-சூப்பிரண்டுகள் கைது

ByKalamegam Viswanathan

Dec 18, 2024

மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது GST துணை ஆணையர், 2-சூப்பிரண்டுகள் உட்பட 3அதிகாரிளை சிபிஐ கையும் களவுமாக கைது செய்து நடவடிக்கை.

மதுரை அப்பன் திருப்பதி பகுதியைச் சேர்ந்த கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 1.5கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக பிபி.குளம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவில் (பொறுப்பு) துணை கமிஷனராக இருக்கும் சரவணக்குமாரை அணுகியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்திய நிலையில், ஜி.எஸ்.டி வரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். மேலும், சுப்பரண்டன்டு அசோக்குமார் மற்றும் ரஜுபீர் சிங் ராணா ஆகிய இருவரும் பேசி முடித்து ரூ-3.50 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். இது தொடர்பாக கார்த்திக் GST அதிகாரிகள் பணம் கேட்பதாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி நேற்று இரவு பிபி.குளம் அலுவலகத்தில் வைத்து ரூ. 3.50 லட்சத்தை அந்த அலுவலகத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர்கள் அசோக் குமார், ரஜுபீர் சிங் ராணா ஆகியோர்களிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரி கலைமணி, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் இந்த தொகையை துணை கமிஷனர் சரவண குமார் வாங்க சொன்னது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுரை GST அலுவலகத்தில் வைத்து 3 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. கார்த்திக்கிடம் ஜிஎஸ்டி பாக்கியியை குறைக்க லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் பின் மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து 3 பேரும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

துணை ஆணையர் சரவணகுமாரின் வீடு அமைந்துள்ள தஞ்சாவூர மாவட்டம் திருவிடைமருதூரில் சிபிஐ டிஎஸ்பி தலைமையில் 5 பேர்கள் காரில் வந்து வீட்டை சோதனை செய்வதற்காக காத்திருக்கின்றனர். வீடு பூட்டப்பட்டுள்ள நிலையில் வீடு திறக்கப்பட்டதும் வீட்டில் சிபிஐ சோதனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆசைப்படுத்துவதற்கு முன்னதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர்களுக்கான முழு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு CBI நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.