• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:

ByKalamegam Viswanathan

Feb 16, 2025

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு, தாசில்தார் ராமசந்திரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் தொடக்கி வைத்தார். மண்டல துணை தாசில்தார்கள் புவனேஸ்வரி, மௌட்பேட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜா வரவேற்றார். இந்த கூட்டத்தில் வேளாண்மை உதவிஇயக்குநர் பாண்டி, தோட்டக் கலை உதவி இயக்குநர் தாமரை செல்வி உள்பட பல்துறையை சேர்ந்த பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், விவசாயிகள் பல்வேறு பிரச்சனை கள் சம்மந்தமாக பேசினர். சாணா ம்பட்டி எட்டி குளம் கண்மாய் ஓடை யில் அடந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க வேண்டும். பெருமாள் பட்டி கீழக்கண்மாய் பகுதியில் சீமை கருவேல காட்டில் உள்ள காட்டு பன்றிகளை வனத்துறையினர் பிடிக்க வேண்டும். குறைகளுக்கு தீர்வு காணும் நிலையில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார்.