• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: ஓபிஎஸ் வருத்தம்

Byமதி

Nov 22, 2021

சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருத்தத்திற்குரியது தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சென்னை IITயில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்கப்பட்டதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதுகுறித்து நிர்வாகத்திடம் பேசி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.