• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Byமதி

Nov 22, 2021

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் கனமழை மற்றும் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், கடலுார், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கன மழை பெய்யும்.நாளை தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.வரும், 24, 25ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.