

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் , பிசிண்டி ஊராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக அச்சங்குளம் கிராமத்தில் பசுமை கிராம திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவுக்கு, ஒன்றியக் குழுத்தலைவர் முத்துமாரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ் வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு ஒன்றியச் செயலாளர் கண்ணன், திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, ஒன்றியக் கவுன் சிலர் உமை ஈஸ்வரி, கிரின் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம், சட்ட ஆலோசகர் செந்தில்குமார் ஆத்மா திட்ட குழு தலைவர் கந்தசாமி கனிமவள நீர்வள பாதுகாப்பு விவசாய சங்கத்தலைவர் திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, பிசிண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.
