• Sat. Apr 20th, 2024

புனித யாத்திரை மேற்கொண்டவர்களுக்கு மானியம்-தமிழக அரசு..

Byகாயத்ரி

Mar 2, 2022

திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள மானசரோவர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் திருத்தலங்களுக்கு புனித யாத்திரை முழுமையாக நிறைவு செய்த தமிழகத்தை சேர்ந்த, இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு (2021) ஏப்ரல் 1 முதல் நடப்பாண்டு மார்ச் 31 வரை புனித யாத்திரை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி, ஏப்ரல் 30 தேர்ந்தெடுக்கப்படும் 500 பேருக்கு மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்குwww.tnhrce.gov.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *