சென்னை 46ஆவது சர்வதேச புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது. புத்தக கண்காட்சியை இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
46ஆவது சர்வதேச புத்தக கண்காட்சி இன்று தொடங்கி, ஜனவரி 22ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மேலும் இதில் வரும் 16,17,18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக காட்சி நடைபெறுகிறது. தமிழின் சிறப்புகளை உலக அளவில் கொண்டு செல்ல சென்னை சர்வதேச புத்தக காட்சி உதவிடும். அப்போது, அமெரிக்கா,லண்டன், இத்தாலி, பிலிப்பைன்ஸ், அர்ஜெண்டினா உள்ளிட்ட 25 நாடுகளிலிருந்து பதிப்பாளார்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர். இதன்மூலம் நம் தமிழ் படைப்பாளர்களுக்கும் வெளிநாட்டு படைப்பாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படும். முதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் இதற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடக்கும் புத்தக கண்காட்சியில் சுமார் ஆயிரம் அரங்குகளுடன் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய பிரத்யேக அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.