விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வைத்தார். தாயில் பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சம்பத் சீனிவாசன் தலைமை வகித்தார் ஊராட்சி செயலாளர் ஸ்டீபன் முன்னிலை வைத்தார்.

தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறைகள் இருந்தால் தெரியப்படுத்தினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.