புதுக்கோட்டை தொழில் பயிற்சிநிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சன் இன்ஜினியரிங் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எஸ். கதிரேசன் மற்றும் ஹோண்டா சிட்டி நிறுவன உரிமையாளர் அசோகன் மாருதி கார் நிறுவன உரிமையாளர் மாருதி கண.மோகன் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியாளர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

நிகழ்வில் நிர்வாக அலுவலர் ஜுவாலா அலுவலக மேலாளர் மோகன்ராஜ் பயிற்சி அலுவலர்கள். எஸ் .கிருஷ்ணன் ஆர்.ரங்கராஜ் மற்றும் எம்.கே.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் நிகழ்வில் இருபால் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பயிற்சி முடித்த இருபால் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பட்டங்களை பெற்றுச் சென்றார்கள். நிறைவில் நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஜோதிமணி நன்றி கூறினார்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் பயிற்றுனர் விஜயகுமார் வரவேற்றார் நிகழ்ச்சியை விளையாட்டு அலுவலர் சரவணகுமார் பயிற்றுநர்கள் மணிகண்டன் ரமேஷ் அன்பரசன் பாலாஜி அலுவலர்கள் சிவசங்கர் மணிகண்டன் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்