• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மன்னர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

ByKalamegam Viswanathan

Jul 19, 2025

மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இன்று 30 வது பட்டமளிப்பு விழா லெட்சுமியம்மாள் வீரப்ப நாயக்கர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார்.

தொடர்ந்து எம்பி கனிமொழி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மாணவர்களாக இந்த உலகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .

புதிய தருணங்கள் உருவாக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். புதிய அனுபவங்களை உங்களிடம் பகிர்வதற்காக பல சவால்கள் உங்கள் பாதையில் வரும். இந்த கல்லூரி அந்த சவால்களை சமாளிக்க உங்களை தயார்படுத்தும். ஒரு அவசர நிகழ்வுகளுக்காக இங்கிருந்து புறப்படுகிறேன்.

இங்க பட்டம் பெற வந்திருக்கு மாணவர்கள் அனைவரும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.

மு க முத்து காலமான செய்தி கேட்டு உடனே பட்டமளிப்பு விழா மேடையில் தனக்கு அவசரமான நிகழ்வுகளுக்காக இங்கிருந்து புறப்படுகிறேன் என்று புறப்பட்டார்.

முன்னதாக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கனிமொழி மறைந்த சகோதரர் மு க முத்துவின் மறைவிற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி புறப்பட்டார்.