

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கொரோனா தொற்று நோயால் மரணமடைந்த தனியார் ஊடக செய்தியாளர் நாகராஜன் அவர்களின் வாரிசுதாரருக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

