• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதியக் கல்விக் கொள்கை குறித்த மாநாட்டை புறக்கணித்த தமிழ்நாடு அரசு..

ByA.Tamilselvan

Jun 1, 2022

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது குறித்த தேசிய கல்வி மாநாட்டில் தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது.
மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேசிய அளவில் குஜராத்தில் இன்றும் நாளையும் 2 நாட்கள் கல்வி மாநாடு நடைபெறுகிறது. புதியக் கல்விக் கொள்கை குறித்து கல்வி மாநாட்டில் விவாதம் நடைபெறுகிறது. தேசிய கல்விக் கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த மாநாட்டில் ஆய்வு செய்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.
மாநாட்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியோ பங்கேற்கவில்லை. துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை.
தமிழகம் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்கூட புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் வந்தது. 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கூட பொதுத்தேர்வு நடத்தும் நிலை புதிய கல்விக்கொள்கையில் இருக்கிறது, இதையெல்லாம் எப்படி ஏற்கமுடியும? என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார்.
புதிய கல்விக்கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஏற்கக்கூடிய நிலையில் இல்லை என தமிழக அரசு கூறிவரும் நிலையில், தேசிய கல்வி மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தகக்து.