தேனி அருகே வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. தேனி மாவட்டம், வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கல்லூரி முதல்வர் சி.கௌசல்யா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்கக துணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் உமாதேவி வரவேற்புரை ஆற்றினார் கல்லூரி முதல்வர் கௌசல்யா தலைமை உரை மற்றும் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு விழா அறிக்கையை வணிகவியல் உதவிப் பேராசிரியர் இரா. அழகேசன் வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது நிகழ்வின் நிறைவாக , வணிகவியல் துறை தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் செல்ல ராசா நன்றியுரையாற்றினார்.