• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேவர் சிலை முன்பு அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு – இளைஞர்கள் அட்டகாசம்…

Byகுமார்

Oct 30, 2021

தமிழகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்திருக்கும் தேவரின் திரு உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் பொதுமக்கள் மாலை அணிவித்தும், பால்குடம் எடுத்தும் அமைதியான முறையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாட்டுத்தாவணியிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அரசு பேருந்து கோரிப்பாளையத்தில் வந்து கொண்டிருந்தபோது பேருந்துகள் மீது ஏறி அனைத்து இளைஞர்களும் நடனம் ஆடத் தொடங்கினர். பின்பு கோரிப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் பேருந்து ஓட்டுநர் மீது லேசான காயம் ஏற்பட்டது. அதேபோல் பயணிகள் மீது லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனால் தேவர் சிலை முன்பு பரபரப்பு காணப்பட்டது.

அதற்குப்பின் காவல்துறையினர் அங்கிருந்து அனைத்து இளைஞர்கலையும் விரட்டியடி அடித்தனர்.

காவல் துறையினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் இருந்தும், அரசு பேருந்தை இளைஞர்கள் செல்லவிடாமல் சிறைப்பிடித்து கண்ணாடியை உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்க மறுத்ததால் மேலும் பரபரப்பானது. இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்படது. இதற்கிடையே காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர்.

இளைஞர்கள் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.