



உசிலம்பட்டி அருகே ஓடும் பேருந்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பேருந்து நடத்துநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்தவர் நல்லச்சாமி, உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றும் இவர் நேற்று 18.02.2025 அன்று காலை எம்.கல்லுப்பட்டிக்கு செல்லும் பேருந்தில் பயணித்த 10ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


இது குறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலைய போலீசார் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துநர் நல்லச்சாமி மீது போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடும் பேருந்தில் பள்ளி மாணவியிடம் அரசு பேருந்து நடத்துநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

