• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் அரசு பேருந்து மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி..!

ByKalamegam Viswanathan

Nov 4, 2023
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் நோக்கி செனற அரசு பேருந்தை ஓட்டுனர் ஜெயக்குமார், நடத்துனர் பாக்கியராஜ் மற்றும் பயணிகளுடன்  திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக  சென்று கொண்டிருந்த போது,  இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த பஸ் மீது மோதியதில்  இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பலத்த காயமடைந்தார். 
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்றும் தெரியவந்தது. 
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முகத்தில் காயம் அடைந்த வாலிபர் ரமேஷ் பலியானார். விபத்து குறித்து மதுரை தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.