• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் அரசு பேருந்து

ByKalamegam Viswanathan

Sep 10, 2025

சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக அரசு பேருந்து நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக பணியாளர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு பேருந்துகளை சாலையின் நடுவே நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டிக்கு வரும் பேருந்துகள் கருப்பட்டி பேருந்தை சாலை நடுவே நிறுத்திவிட்டு போக்குவரத்து தற்காலிக பணியாளர்கள் சென்று விடுகின்றனர் இதன் காரணமாக காலை நேரங்களில் பணிகளுக்கு செல்பவர்கள் தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் அடுத்தடுத்து வரும் வாகனங்கள் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் போக்குவரத்து பணியாளர் இடம் கேட்டால் பொறுப்பில்லாமல் பதில் சொல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் தினசரி நடைபெறும் இந்த சம்பவத்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் செல்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் ஆகையால் போக்குவரத்து தற்காலிக பணியாளர்கள் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் பேருந்துகளை நிறுத்த அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்