சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு ‘டூடுல்’ ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதை குறிப்பிடும் வகையில் இந்த டூடூல் அமைந்துள்ளது.மேலும், சிறப்பு அனிமேஷன் வீடியோவையும் கூகுள் வெளியிட்டது. மகளிர் தினத்தின் வரலாற்று பின்னணி, அதன் முக்கியத்துவம் ஆகியவையும் அதில் விளக்கப்பட்டு இருந்தன.
ஒடிசாவின் புரி கடற்கரையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் வடிவமைத்துள்ளார். சுதர்சன் பட்நாயக்கின் இந்த மணற்சிற்பத்தை கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர். மேலும் பிரபல மணல் சிற்ப கலைஞரான மனாஸ் குமார் சாஹூ சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். சார்புகளை உடை (Break the bias) என்ற தலைப்பின் கீழ் மனாசும் அவரது குழுவினரும் சேர்ந்து 15 அடி அகலமான மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.

