உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது.
போர் பகுதியில் சிக்கியிருக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்சிகியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் நிலவி வரும் சூழல் தொடர்பாக அதிபர் செலன்ஸ்கியுடன் சுமார் 35 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவியதற்காக செலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். சுமி நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற தொடர்ந்து உதவ பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.