இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் புதிய ஸ்டூடியோவான, ‘குட்லக் ஸ்டூடியோஸை நடிகர் சூர்யா துவக்கி வைத்தார்.
40 வருட பாரம்பரிய குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம், குட்லக் ஸ்டூடியோஸ் எனும் பெயரில் மீண்டும் உதயமானது !!
திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர். தமிழின் பெரும் அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்ட இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்
எம். அப்பாவு எம்.எல் .ஏ தமிழக அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர் பாபு, டி.மனோ தங்கராஜ், டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின் மாமனார் நடிகர் விஜயகுமார், ரிய ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.

புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் எம். அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார். மற்றும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், தயாரிப்பாளர் ராஜசேகர், கற்பூரசுந்தர பாண்டியன், எஸ்.ஆர்.பிரபு, மோகன் நடராஜன், எம்.எஸ். முருகராஜ், கார்த்திக் சந்தாணம், எடிட்டர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் கோபிநாத், சுகுமார், ஸ்ரீதர், நடிகர் தலைவாசல் விஜய், நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் கார்த்திக் ராஜா, இயக்குனர் அலெஸ் பாண்டியன், நடிகர் சௌந்தர்ராஜா, நடிகர் ராஜேஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஓ.ஏ.கே.சுந்தர், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்களை டைரக்டர் ஹரி, ப்ரிதா ஹரி வரவேற்றனர்.
முன்னணி நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது.

இந்த திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக, பல திரை ரசிகர்களின் வாழ்வில் நினைவலைகளின் சின்னமாக விளங்கிய இடமாகும். குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கில் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த எம் ஜி ஆர், கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, ஜானகி ஆகியோருடன் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும் திரைப்படம் பார்த்து ரசித்த பெருமை இந்த திரையரங்கிற்கு உள்ளது.

மிகவும் புகழ்மிகு அரங்கமாக இருந்த இந்த திரையரங்கம் தான் இபொழுது ‘குட்லக் ஸ்டூடியோஸ்’ எனும் பெயரில் சாலிகிராமத்தில் மீண்டும் உதயமாகி உள்ளது.


- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]