• Fri. Mar 24th, 2023

உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

ByA.Tamilselvan

Jul 8, 2022

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தேதி குறிப்பிடாமல் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும் 17ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
கல்லூரி மாணவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலைக் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *