• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ByA.Tamilselvan

Aug 9, 2022

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அதாவது செய்தி மக்கள் தொடர்பு பணியாளர்களின் நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுவரை இருந்த நேரடி நியமனத்திற்கு பதில் இனிமேல் டிஎன்பிஎஸ்சி மூலமாக நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் காலி பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வருபவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.