முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரான தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
2016ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அவர் தன்னிடம் 1கோடி ரூபாய் அளிவில் சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார். 2020ம் ஆண்டு 7 கோடி வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முருகன் எர்த்ஸ் நிறுவனத்தில் தங்கமணியும், அவரது மகனும் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. முறைகேடாக சேர்த்த சொத்துக்களை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கமணி எந்தெந்த நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார் என்ற தகவலும் முதல் தகவல் அறிக்கையில் பதிவாகியுள்ளது.