• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பெண்கள் காவல்துறையின் பொன்விழா சைக்கிள் பேரணி கன்னியாகுமரியில் நிறைவு

தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக கொண்டாடும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி குமரியில் நிறைவடைந்தது.


தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பொன் விழாவாக கொண்டாடும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 730 கி.மீ தூரத்திலான சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி இன்று குமரியில் நிறைவடைந்தது. பேரணியில் வந்த காவலர்களுக்கு மாவட்டட காவல்துறை மூலம் ஆரத்தி எடுத்து மலர் மாலை அணிவித்து பூ தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் 109 பெண்காவலர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் காவல்றை ஐஜி. ராதிகா ஐபிஎஸ், குமரி மாவட்ட கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.