• Thu. Apr 25th, 2024

தங்கம் விலையேற்றம்…மக்கள் சோகம்..!

Byகாயத்ரி

Dec 4, 2021

மற்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு முதலீடு மட்டுமே. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது கலாசாரமாகவே இருந்து வருகிறது.

தங்கம் என்பது இந்தியாவில் வெறும் உலோகமல்ல சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. தங்கம் சேமிப்பது அத்தியாவசியம் என்ற நிலையில் அதன் விலையேற்றம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர் உயர்வும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 36 ஆயிரத்தை கடந்து சென்றதுமே தான் இதற்கு முக்கிய காரணம்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,088-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து, ரூ.4,511-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.65,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *