சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35,728க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகில் கொரொனா தொற்றில் எதிரொலியாக சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதால் தங்கத்தில் விலை ஏறியது. இந்நிலையில் சில நாட்களாகத் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,466க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.68.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சரசரவென சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
