சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் 59 ரூபாயைக் ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரம் ரூபாயைக் கடந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வைச் சந்தித்து வந்தது. மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் எதிரொலியாக கடந்த 1-ம் தேதி தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்நிலையில் தங்கம் விலை நேற்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 7ஆயிரத்து 890 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 63 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.