• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

ByA.Tamilselvan

Oct 4, 2022

கடந்தமாதத்தில் படிப்படியாக குறைந்துவந்த தங்கத்தின் விலை இந்த மாததுவக்கத்திலிருந்தே உயரத்தொடங்கியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் 38,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் 70 ரூபாய் அதிகரித்து 4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது. இதேபோல், வெள்ளி கிலோவுக்கு 4,200 ரூபாய் அதிகரித்து 66,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது.