• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை இவ்வளவு குறைச்சுடுச்சா?

By

Aug 18, 2021

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது.


கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.


கொரோனோ வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. எனினும் கடந்த இரண்டு நாட்களாக தங்கள் விலை உயர்ந்துள்ளது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,470 க்கும் ஒரு சவரன் ரூ.35,760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.40 க்கு விற்பனையாகி வருகிறது.