நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விலை உயர்வைக் கண்டித்தும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொழிற்சங்கம் டியூசிசி சார்பில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பிவி கதிரவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் செய்தியாளர்களை சந்தித்த பிவி கதிரவன் பேசும்போது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.