• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தொடர் இறக்கத்தில் தங்கம்.., இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

Byவிஷா

Oct 4, 2023

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்திருப்பது இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
இன்று (அக்டோபர் 4-ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து சவரனுக்கு ரூ.42,280 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து கிராமுக்கு ரூ. 5,285 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 46,040 ஆகவும் கிராமுக்கு ரூ.5,755 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ. 73.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த விலைகளை பார்க்கும் போது மக்களுக்கு தங்கத்தின் மீது ஒரு பயம் வருகிறது. அதனால், மக்கள் தங்கம் வாங்குவதற்கு யோசனை செய்து வருகின்றனர்.ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.