• Sun. Apr 28th, 2024

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதப்பூதான்.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதப்பூ தான், மணக்கும் மல்லிகைப் பூ அல்ல என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். 
இன்றைக்கு திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த 520 தேர்தல் வாக்குறுதிகள் காகித பூவாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. மக்களுடைய கோரிக்கைகள் எல்லாம் திட்டங்களால் செயல்படுத்துவதற்காக தான் தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கப்படுகிறது. அதை நம்பித்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் அந்த அடிப்படை தத்துவத்தை இலக்கணத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு தகத்தெறிந்திருக்கிறது. 

சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் கூட்டு நலச் சங்கத்தினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று திமுக தேர்தல் அறிக்கை எண் 311 கூறப்பட்டுள்ளது. அதேபோல் 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசாணை 141யை ரத்து செய்து, 2013 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணி வழங்குவோம் என்ற அந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்களுக்கு மனம் இல்லையா? கருணை இல்லையா?
கணினி, தையல்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவு பகுதி நேர ஆசிரியர்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால், நிரந்தர ஆசிரியராக ஆக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்கள்?
இதை நிறைவேற்ற தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆசிரியர்கள் வருகிறார்கள். ஆனால் 520 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பச்சை பொய் நீங்கள் கூறினீர்கள் அப்படி என்றால் தற்போது உண்ணாவிர போராட்டம் எதற்காக?
இன்றைக்கு இளைய சமுதாயத்தை அறிவு சார்ந்த சமுதாயமாக உருவாக்குவதற்கு, கல்விதான் மனித வளர்ச்சிக்கு முக்கியம், கல்விதான் எதிர்கால சந்ததியை பாதுகாக்கும். அப்படி கல்வியை போதிக்கும் ஆசிரியர்களே இன்றைக்கு உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராட்டம் நடத்துகிறார்கள் ?
அந்த தேர்தல் வாக்குறுதியை இன்றைக்கு சுட்டிக்காட்டி சொல்கிறார்களே? ஒரு நாட்டினுடைய முதலமைச்சர் இறையாண்மைக்கு எதிராக இன்றைக்கு மக்களிடத்திலே ஒரு பொய்யான பிரச்சாரமாக கூறுகிறார் இப்படிப்பட்ட முதலமைச்சர் தேவையா? திமுக அரசின் சாதனையாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, என உயர்ந்துள்ளது மேலும் அம்மா அரசு வழங்கிய திட்டங்களான கறவை மாடு ஆடு திட்டங்கள் நிறுத்தம், தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தம் ,குடிமராமத் திட்டம் நிறுத்தம் இப்படி மக்கள் திட்டங்களை ரத்து செய்வதுதான் திமுக சாதனையா? இது தான் திராவிட மாடல் அரசா? இப்படி 520 தேர்வு வாக்குறுதிக்கும் போராட்டத்தை நடத்தினால் தமிழ்நாடு போராட்ட களமாக மாறிவிடும்.
ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிக்கும் ஒவ்வொரு பிரிவினர் போராடுகிறார்கள்.தேர்தல் வாக்குறுதிகளை ஏமாற்றி மக்களை வஞ்சிக்கிற அரசாக உள்ளது.
ஆகவே தான் இந்த 520 தேர்தல் வாக்குறுதிகள் காகித பூவாக காட்சியளிக்கிறது இது மணக்கும் மல்லிகைப்பூ அல்ல. ஆகவே வருகிற தேர்தலில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் தேர்தல் வாக்குறுதியை கொடுக்காமல் மக்களை சந்திப்பதற்கு நீங்கள் தயாரா என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்?
மக்களை ஏமாற்றி, வஞ்சித்து, மக்களை மோசடி இருக்கிற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே வருகிற தேர்தல் காலங்களில் நீங்கள் எந்த வாக்குறுதிகளை கொடுத்தாலும் அது நம்ப இந்த நாட்டு மக்கள் தயாராக இல்லை.
மாதா பிதா குரு தெய்வம் என்று அந்த தெய்வத்துக்கு மேலாக இருக்கிற அந்த ஆசிரியர்கள் இன்றைக்கு வீதியிலே உண்ணா நோன்பு அறப்போராட்டம் இருந்து கொண்டிருக்கிறார்களே ? நெஞ்சுரத்தோடு போராடும் ஆசியர்களுக்கு, புரட்சித்தலைவர் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார் அப்போது கோரிக்கைகள் எல்லாம் கனிவோடு பரிசீலனை செய்வார். கல் கூட கரையும் ஆனால் இன்றைக்கு உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வரும் இந்த ஆசிரியர்கள் போராட்டத்தை கண்டு முதலமைச்சரின் கல்மனது கூட கரையவில்லை என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *