• Thu. Jul 17th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

வார சந்தையில் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Jun 3, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ. 75லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு,மாடு,கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது.

இந்த சந்தைக்கு மதுரை,திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை சந்தை செயல்படும். இதில் ஆடு மாடு கோழிகள் காலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிந்து விடும். அதன் பின் காய்கறி, பலசரக்கு வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரங்கள் மட்டும் தொடர்ந்து ஆவிற்பனையாகும். இந்நிலையில் வரும் 7ந்தேதி சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதை யொட்டி கிராமப் புறங்களில் இருந்து வெள்ளாடுகள் வந்திருந்ததுசெம்மறி ஆடுகள் அதிகம் வரவில்லை.

அதனால் ஒரு ஆட்டின் விலை ரூ.15ஆயிரம் தொடங்கி ரூ. 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. இதில் எடை அதிகம் என்பதால் பாதி ஆடுகள் விற்காமல் திரும்பி சென்றனர்.இதனால் ரூ.75 லட்சத்திற்கு வியாபாரம் நடந்தது. பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வழக்கத்தைவிட ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதால் நாட்டு வியாபாரிகள் ஆடு வளர்ப்பு மகிழ்ச்சி அடைந்தனர்.