• Thu. Apr 25th, 2024

புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு- 4 மணி நேரம் சந்திரன்நமஸ்காரம் செய்து உலக சாதனை

Byதரணி

Nov 21, 2022

புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு குறித்து தொடர்ச்சியாக 4 மணி நேரம் சந்திரன்நமஸ்காரம் செய்து உலக சாதனை நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது
சகானாஸின் புதிய உலக சாதனைக்காக சகனா யோகா மையத்தின் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 4 மணி நேரம் தொடர்ச்சியாக சந்திரன்மஸ்காரம் செய்து புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை விளக்கினார்கள்.மேலும் பல்வேறு வகையான ஆசனங்களையும் செய்தனர்,சுமார் 45 நிமிடங்கள் மாணவர்கள் மீன் தொட்டிக்குள் அமர்ந்து மகமித்ரம், மற்றும் தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து ராஜக புட்சம், செங்கல்களை அடுக்கி அதற்கு மேல் உட்காந்து நகு ஏக தண்டாசனம், பரிகாசனம், முழு அங்க சிரஸ் சாசனம் போன்றவையும் மாணவர்கள் செய்து காட்டினர் .


இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த சகானா யோகா மையத்தின் நிறுவனர் டாக்டர்..மீனா கிருஷ்ண மூர்த்தி அளித்த பேட்டியில் உலக வெப்பமயமாதலின் அவசியம் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம் மேலும் மரம் நடுதல் ,பூமியை குளிர்விக்க நீர்சேகரிப்பு அவசியம் என்பதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் அறியவேண்டி இந்த உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருப்பதாகவும் மேலும் அரசாங்கமும் மரம் நடுவது,சுற்றுச்சூழலை பாதுகாப்பது போன்ற புவி வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடம் கட்டாயப்படுத்தவேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தி.மு.க எம்.பி.டி.கே.எஸ் .இளங்கோவன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் . கே.எஸ்..ரவிசந்திரன், நக்கீரன்கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்,
இந்த உலக சாதனை நிகழ்த்திய (சகானா )யோகா மையத்தின் மாணவர்களுக்கு, குளபல் வேர்ல்ட் ரெக்கர்ட் மூலம் சான்றிதழ்களும், கேடயமும் வழங்கபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *