• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்த ஜி.கே.வாசன்!!

ByA.Tamilselvan

Jan 20, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து வட கிழக்கு மாநிலங்களின் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது.முதலமைச்சர் உடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, பேச்சுவார்த்தை சமுகமாக முடிந்தது என்றார். மேலும், வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் தலைமை விரைவில் அறிவிக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தற்போதுள்ள அரசியல் சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அதிமுக போட்டியிடும் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.