• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கல்வியில் சொர்க்கமாக எனக்கு வாய்ப்பளியுங்கள் சக்கரபாணி பேச்சு..,

ByS.Ariyanayagam

Apr 19, 2026

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதி கல்வியில் சொர்க்கமாக மாற எனக்கு வாய்ப்பளியுங்கள் என அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் அர. சக்கரபாணி வாக்குகள் சேகரித்து பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத பல வாக்குறுதிகளை நிறைவேற்றி பொற்கால ஆட்சி நடத்திவருகிறார். பொருளூர், அத்திக்கோம்பை, ஓடைப்பட்டி, ஜவ்வாதுபட்டி, கொத்தையம், கோட்டத்துறை, விருப்பாச்சி, அரசபிள்ளைபட்டி நங்காஞ்சியாறு, ஜோகிபட்டி, ஆகிய பகுதிகளில் ரூ.42 கோடி செலவில் தடுப்பணை மற்றும் உயர்மட்ட பாலம் அணைக்கட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொகுதியில் கல்வி வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் ஒட்டன்சத்திரம், மேல்கரைப்பட்டி, இடையகோட்டை குட்டில் நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ரூ 22.78 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், சுகாதார வளாகம், சுற்றுச்சுவர் ஆகியவை கட்டித் தரப்பட்டுள்ளன. கேதையுறும்பு, பொருளூர் அரசு பள்ளிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் ரூ 2 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கலையரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன, அரசுபள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்கும் திறனை திறனை வளர்க்கும் வகையில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ஸ்போக்கன் ஆங்கில பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம் தொகுதி கல்வியில் சொர்க்கமாக மாற எனக்கு மீண்டும் வாய்ப்புகள். நமது குழந்தை செல்வங்கள் படித்து, பட்டங்கள் பெற்று, பதவிகள் வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முதல்வர் மூலம் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.