• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆசிரியரை அடித்து, உதைத்த மாணவிகள் – வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Dec 16, 2022

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை அடிதைது உதைத்து வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் காட்டேரி கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விடுதியில் தலைமை வார்டனாக பணியாற்றிவரும் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அவ்வபோது மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்ந மாணவிகள் கம்பு, கட்டைகள் கொண்டு அவரை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரை மாணவிகள் உள்ளே விட மறுத்தனர். விடுதியின் கதவை பூட்டிக்கொண்ட மாணவிகள், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வார்டனை அடித்து துவைத்து எடுத்தனர். நீண்ட நேரம் போராடி வார்டனை மீட்ட போலீசார் பாலியல் தொந்தரவு குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.