

சுதந்திரப் போராட்ட வீரர், பொல்லான் பிறநாளான டிசம்பர் 28ம் தேதி அரசு விழாவாக கொண்டாடவும் அரச்சலூர் நல்ல மங்காபாளையத்தில் நடத்தவும் அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது
மாவீரன் பொல்லான் நினைவு நாள் ஆடி 1- அன்று அரசு மரியாதையுடன் கடந்த நான்கு வருடங்களாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்று வருகிறது.
மாவீரன் பொல்லான் மணிமண்டபம் அமைக்க தமிழக முதல்வர் ஒரு கோடியே 82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான நிலம் தேர்வு செய்ய வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் நிலம் தேர்வு செய்ய இருதரப்பினரையும் அழைத்து வீட்டுவசதி துறை அமைச்சர் சுமுகமாக பேசி முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவீரன் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான அரச்சலூர் கிராமம் நல்ல மங்காபாளையத்தில் நினைவுச் சின்னமும், வடுகபட்டி கிராமம் ஜெயராமபுரத்தில் நினைவு அரங்கமும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும், கொல்லான் வாரிசுதாரர்களுக்கும் மற்றும் சமுதாய தலைவர்களும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
மாவீரன் பொல்லான் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நாலு வருடங்களாக இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் பொல்லான் பிறந்தநாள் விழாவை நடத்தக் கூடாது. வருகிற டிசம்பர் 28 பொல்லான் பிறந்தநாள் விழாவை அரச்சலூர் கிராமம் நல்ல மங்காபாளையத்தில் நடத்த வேண்டும் என அனைத்து கட்சி மற்றும் இயக்க மாநில மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மேற்கொண்ட இரண்டு இடங்களிலும் மாவீரன் பொல்லான் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பளித்து விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


