• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சிறுமி உயிரிழந்த விவகாரம் – தாய்க்கு அரசு வேலை..!

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தும்பைபட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி காதலர் தினத்தன்று தனது காதலன் நாகூர் ஹனிபாயுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பிப்ரவரி 24-ஆம் தேதி மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்குபதிவு செய்து காவல் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அந்தச் சிறுமியை மயங்கிய நிலையில் சிறுமியின் காதலன் தாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் சிறுமியை அவரது பெற்றோர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்டதால் தான் இறந்ததாக தகவல்கள் வெளியாகியது.

இதைத்தொடர்ந்து, சிறுமி கடத்தல் வழக்கில் நாகூர் ஹனிபா, தாய், தந்தை மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் தேடுவதை அறிந்து அந்த சிறுமியும், அவரது காதலனும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறந்த சிறுமியின் தாய்க்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலவளவு அரசு தொடக்க பள்ளியில் சமையலராக நியமித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.