• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 27, 2023
  1. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?
    தொல்காப்பியம்
  2. ”தழல்” எனும் சொல்லின் பொருள்?
    நெருப்பு
  3. “ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்?
    புதிய ஆத்திச்சூடி
  4. “திணை” எனும் சொல்லின் பொருள்?
    ஒழுக்கம்
  5. கவிமணி எழுதிய நூல்கள்?
    மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி
  6. ”தணித்தல்” என்பதன் பொருள் என்ன?
    குறைத்தல்
  7. முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?
    அனிச்சம்
  8. பத்துப்பாட்டு நூல்களில் அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?
    நெடுநல்வாடை
  9. ”குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?
    அகநானூறு
  10. ”சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்?
    மணிமேகலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *