• Wed. Dec 11th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 25, 2023
  1. பாலை நில மக்களின் பாட்டு?
    வேட்டுவவரி
  2. செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில்
    எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
    எட்டாவது இடம்
  3. ”தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது?
    தமிழ் எழுத்துக்கள்
  4. சிந்து, வைகை, யமுனை, கங்கை – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
    கங்கை, சிந்து, யமுனை, வைகை
  5. அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது?
    எதுகை
  6. “கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
    ஒளவையார்
  7. ”கரி” எனும் சொல் உணர்த்துவது?
    யானை
  8. மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
    8
  9. சிங்கத்தின் இளமைப் பெயர்?
    குருளை
  10. ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்?
    கணியன் பூங்குன்றனார்