• Wed. Feb 19th, 2025

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 5, 2023

  1. “முத்ரா திட்டம்” எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
    2015
  2. “சீமாதர்ஷன்” என்ற எல்லை சுற்றுலா திட்டத்தை எங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துள்ளார்?
    குஜராத்
  3. 71 – வது தேசிய கூடைபந்து சாம்பியன் ஷிப் போட்டியில் (ஆடவர் பிரிவு) எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?
    தமிழ்நாடு
  4. “ஒரு நிலையம், ஒரு பொருள்” திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த ரயில் நிலையத்தில் “நெட்டி வேலைப்பாடு விற்பனை அரங்கம்” தொடங்கப்பட்டுள்ளது?
    தஞ்சாவூர்
  5. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பினாகா MK -1 ராக்கெட் அமைப்பு எங்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது?
    ராஜஸ்தான்
  6. 2022 – ஆம் ஆண்டு 5 -வது BIMSTEC உச்சி மாநாட்டை நடத்தும் நாடு எது?
    இலங்கை
  7. அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற ஷாஹி லிச்சி சார்ந்த இந்திய மாநிலம் எது?
    பீகார்
  8. பெண்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்காக “DSLSA” சட்ட உதவியகத்தைத் தொடங்கிய அமைப்பு எது?
    தேசிய பெண்கள் ஆணையம்
  9. எஃகு கழிவுகளால் ஆன முதல் சாலையைப் பெற்றுள்ள இந்திய நகரம் எது?
    சூரத்
  10. சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் கேமராக்களால் சூழப்பட்டிருக்கும் இந்திய நகரம் எது?
    கோழிக்கோடு