• Tue. Dec 10th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 28, 2022
  1. உலகின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகா எப்போது பிரதமர் பதவி ஏற்றார்?
    21.7.1960
  2. பைபிள் கதைகளில் வரும் சாலமன் மன்னர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
    இஸ்ரேல்
  3. முதன்மை வண்ணங்கள் என்று அழைக்கப்படுவை எந்த நிறங்கள்?
    சிவப்பு, பச்சை, ஊதா
  4. டிஸ்னி வேல்டு எங்கு உள்ளது?
    அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ‘அனர்ஜெய்ம்’ என்னும் இடத்தில் உள்ளது. இது 1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  5. திரைப்படத் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படுத்தும் ‘கால்ஷீட்’ என்பது என்ன?
    எட்டுமணி நேரம் நடிப்பதற்கான ஒப்பந்தம் என்று பொருள்
  6. சுமேரிய நாகரிகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
    டைகிரிஸ் மற்றும் யூஃப்ரடிஸ்
  7. அமெரிக்க கொடியில் எத்தனை கோடுகள் உள்ளன?
    13 கோடுகள்
  8. சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் பெண் டீன் யார்?
    டாக்டர் லலிதா காமேஸ்வரன்
  9. மிசோரம் எப்போது மாநில அந்தஸ்தைப் பெற்றது?
    20.2.1987
  10. தமிழ்நாட்டில் எங்கு முதன்முதலில் நகராட்சி செயல்படத் தொடங்கியது?
    வாலஜாபேட்டை