• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byதரணி

Aug 31, 2024

1. தமிழ்நாட்டிலுள்ள கடற்கரையின் நீளம்? 1076 கி.மீ

2. தமிழ்நாட்டின் 32-வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு? 2008

3.மதிய உணவுத்திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? காமராஜர்

4. வ.உ.சிதம்பரம் எந்த புத்தகத்தின் ஆசிரியர்? மெய்யறிவு

5. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம்? திருநெல்வேலி

6. திருநெல்வேலி அருகில் கூடங்குளத்திலுள்ள அணுமின் நிலையமானது இந்திய அரசாங்கத்திற்கும் _____________ அரசாங்கத்திற்கும் இடையேயான கூட்டு? இரஷ்யா

7. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகியவற்றின் கடலோரச் சமவெளிப் பகுதிகள் ஒன்றாக எவ்வாறு அறியபடுகிறது? சோழமண்டலச் சமவெளிகள்

8.நாட்டின் முதல் இசை அருங்காட்சியகத்தை _______ ல் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
திருவையாறு

9. சுயமரியாதை திருமணம் எந்த ஆண்டு தமிழ்நாடு அரசினால் சட்டப்படியாக அங்கீகாரம் அளிக்கப்பட்டது? 1967

10. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டின் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை? 80.33%